Monday, December 28, 2009

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.


ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
 ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?


இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?


ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?


தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?


தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?


மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?


மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

Tuesday, December 15, 2009

முஸ்லிமின் உயர்ந்த பண்பு !!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

http://www.yaaseen.net/panpaadu/panpaadu_02.html

ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

1. நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.

2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)

3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது

4. அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.

5. அவன்நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது.

6. அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு!

http://www.readislam.net/maududi3.htm

முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன் முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?

ஆங்கில சமூகத்தில் பிறந்ததால் ஒருவன் ஆங்கிலேயனாகிறான். பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். ஹரிஜன் மகன் ஹரிஜனாகிறான்; இப்படி முஸ்லிமுக்கு பிறந்தவன் முஸ்லிமாகிறானா? பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா? இவற்றிற்கு நீங்கள் என்ன விடை கொடுப்பீர்கள்?

இல்லை நன்பரே! பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான்; இஸ்லாத்தை கடைபிடிக்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாவதில்லை; என்றுதானே சொல்வீர்கள். ஒரு மனிதன் ராஜாவாக இருந்தாலும், ஆங்கிலேயனாக இருந்தலும், பிராமணனாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவனும் முஸ்லிமாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அவன் ஸையித் வம்சத்தில் வந்தவனாயிருந்தாலும் சரி.

ஏன் அன்பர்களே, என் கேள்விக்கு இப்படித்தானே பதில் கொடுப்பீர்கள்? அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் ஓட்டிக்கொண்டிருக்கின்ற பிறப்புரிமையல்ல. அதை அடைவதற்கு நீங்கள்

ஸலாம் கூறுதல்

ஸலாம் கூறுதல்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

S.Gulam Thasthageer

Sunday, December 13, 2009

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Subject: அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.

மஹ்ஷர் வெளியின் அகோரம்

மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு கரண்டைக் கால் வரையும், சிலரக்கு முட்டுக்கால் வரையும், சிலருக்கு இடுப்பவரையும், சிலருக்கு வாய்வரையும் வந்துவிடும். அந்த நேரத்தில் நான்கு கேள்விகளுக்கு விடை சொல்லாதவரை தான் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது. ஒவ்வொருவரும் தன்னைப்பற்றியே சிந்திக்கும் நாளாகும் அது. அந்த நாளில்தான் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் மேல்கூறப்பட்ட ஏழு பண்புள்ள மக்களை அமரவைப்பான். அல்லாஹ் நம்மையும் அந்த கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!

பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,

சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.

Wednesday, December 9, 2009

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி)

உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.

மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)


திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)

இன்னும் எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ்,

அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆதமின் சந்ததிகளே!! அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்


பிறப்பதற்கு முன்

நீங்கள் இந்த உலகில் பிறப்பதற்காக உங்களுக்காகவே ஆண், பெண் இருவரை நியமித்தான்! அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர்! ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள்? (அவ்லியாதான் உங்கள் பகவான்)


நீங்கள் கருவாகிய போது

உங்கள் தாயின் கருவரையில் நீங்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைத் தாயோ கருவைச் சுமந்துக்கொண்டு பட்ட இன்னல்களை உணர்ந்த துண்டா? நாள்தோறும் ஒருவித உடல் மாற்றம், குடும்பத்தில் அவளின் வேலைப் பளுவினால் சில நேரம் தடுமாற்றம் இறுதியில் பிரசவ வேதனை அதில் அவள் மரணத்தை தொட்டு முத்தமிடுகிறாள் அல்லாஹ் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் அழகிய மறுவாழ்வு கொடுக்கிறான் நீங்கள் அந்த தாயையும் அந்த ரஹ்மானை மறந்துவிடுகிறீர்கள்!


நீங்கள் வளரும் பருவத்தில்

என் மகன் வளர்ந்துவிட்டான் அவனுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணி உங்கள் தந்தை ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க தம் சக்திக்கு உட்பட்டு மூட்டையாவது சுமந்திருப்பார் ஆனால் நீங்களோ பள்ளிக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்! தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள்! அப்படியிருந்தும் அல்லாஹ் உங்க ளுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான் அதையும் தூக்கி வீசிவிடுகிறீர்கள்!


இளமைப் பருவத்தில்

இப்போது உங்கள் தந்தை சற்று வசதியானவராக இருந்திருப்பார் அவரிடம் அன்புச் சண்டை போட்டிருப்பீர்கள் அதனால் தம் சொந்த விருப்பத்தை உதறித்தள்ளிவிட்டு பெற்ற மகனுக்காக மோட்டார் பைக் வாங்கி கொடுத்தி ருப்பார் அதை உணராமல் ஊர் சுற்றியிருப்பீர்கள்! அல்லாஹ் உங்கள் தந்தையின் உள்ளத்தில் உம்மீது பாசத்தை போட்டானே இது நினைவுக்கு வருகிறதா?

வாலிபப் பருவத்தில்

பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒற்றுமையாக கூடி நின்று உங்களுக்கு மணமுடிக்க உதவியிருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறதா? மணப்பெண்ணும் தாய்வீட்டை மறந்துவிட்டு உங்களிடம் ஏதோ அடிமைப்

Thursday, December 3, 2009

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

அஸ்ஸலாமு அலைக்கும்


http://suvanathendral.com/portal/?p=335

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)

குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.

இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும்

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்

1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப் புகழவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.



இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!



அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!



அறிவிப்பாளர் கூறுகிறார்:



பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ



2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்

உயர்வானவனாகிய அல்லாஹ்,

(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ

மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)



எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.



திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.



அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:



(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..


"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"



பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்

நாவைப் பேணுக!

உண்மை பேசுக!

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!

பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!