Thursday, January 28, 2010

அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


என் அன்புச் சகோதர, சகோதரிகளே நாம் மனிதர்கள் நம் அல்லாஹ்வோ கருணை வள்ளலாக இருக்கின்றான்! வாருங்கள் அந்த கருணை வள்ளல், ரஹ்மத்துல் ஆலமீன்!

ரப்புல் ஆலமீன் எவ்வாறு மக்கள் மீது கருணைகாட்ட தன் திருமறையின்
வாயிலாகவும் நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளாலும் சொல்கிறான் என்பதை அறிந்துக் கொள்வோம்! மேலும் அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகளை படித்து நல்லுணர்வு பெறுவோமாக!

நம்மை 10 மாதம் வயிற்றில் சிரமத்துடன் சிரமமாக பெற்ற தாய்க்கு முதல் இடம் பிறகுதான் தந்தை!

“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள்.

“அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) : புகாரி, முஸ்லிம்

பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்!

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள் அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.

முதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது!

“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன்.
“முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.


"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.

"அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.

குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.

இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.

Tuesday, January 26, 2010

வாழ்க்கைத் துணைவி

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن


‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).

—————————————————————————————–


திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.


நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا

மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,


http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1067

இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல 1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.


2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது http://www.alfy.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.


3. http://www.surfnetkids.com/ என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.


4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது http://www.kidsites.org/ என்ற முகவரியில் உள்ள தளம்.

கோபம் தன்னையே அழித்து விடும்

அஸ்ஸலாமு அலைக்கும்


உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...


· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...


· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...


· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)


· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

என்னை அழையுங்கள் !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


http://www.annajaath.com/?p=1845

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப் புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல் லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறைவச னத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட் டினார்கள்.

அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக் கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட் டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும் பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக் கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக் களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார் களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.



பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண் டிய ஒழுங்குமுறைகள்:


பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுட னும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங் கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுட னும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.

1. தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا


அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா


பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ


அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்


பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.


ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395

3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ


அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322


பொருள் :


இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ


ஃகுப்(எ)ரான(க்)க


பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7

5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய


ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

பிரிவினை !!

நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான்.


مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)

மிகச் சாதாரண அளவில் தானும் முஸ்லிம்களுக்கிடையில் ஜக்கியமினை நிலவுவதற்கு எதிராக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஒரு முறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் 'ஓ' அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் 'ஓ' முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் "ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!" எனக் கேட்டார்கள்."அவர்களுக்கிடையில் என்ன தகராறு?" என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.

உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்


http://www.annajaath.com/?p=325

“பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200.

“எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயல்களுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறோன்றுமில்லை, அவர்கள் செய்த யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.” அல்குர்ஆன் 11: 15,16.


“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” அல்குர்அன் 42:20.

மேற்கண்ட வசனங்களை நன்றாக ஊன்றிக் கவனித்துப் பார்த்தால், ஒன்று நன்றாக விளங்குகிறது. இவ்வுலகத்தில் நல்ல வசதியுடனும், சகல சவுகரியங்களுடனும் வாழ வேண்டும் என்று கேட்பவருக்கு அவர் கேட்பவை இங்கேயே கொடுக்கப்பட்டு விடும் என்று தெளிவாக விளங்குகிறது. இவ்வுலக நன்மையை மட்டும் கேட்பவருக்கு, (தான் நாடியவருக்கு) “கொடுத்து விடுவேன்” என்று அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறுவதால், இதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. வேறு எங்கெங்கோ, அலையோ அலை என்று அலைய வேண்டியதில்லை. நாகூர், அஜ்மீர், ஏர்வாடி என்று ஓட வேண்டியதில்லை. அல்லாஹ்விடமே, வேறு ஏஜன்சி (தரகர்) இன்றியே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மெளலிதுகள், ராத்திபுகள் என்று கத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

மேற்கண்ட அனாச்சாரங்கள் யாவும், இவ்வுலக நன்மையை வேண்டியே செய்யப்படுகின்றன. ஏதாவது ஒரு தீராத நோய் வந்துவிட்டால், நமது பாத்திஹா மெளலானாக்கள், ஏர்வாடியில் சென்று படு! என்று கூறுவதைத்தான் பார்க்கிறோம். விபரம் அறிந்தவர்கள் கூட, “அல்லாஹ்வே இவ்வுலக நன்மையை (மட்டும்) நாடுபவருக்கு, கொடுக்கிறேன் என்று அல்குர்ஆனில் கூறுகிறான்; எனவே, அல்லாஹ்விடமே கேள்” என்று கூறுவதை நாம் கொடுக்க முடிவதில்லை.