Monday, December 24, 2012

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.


ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!     3          
 
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?” (88:17) என்று கேட்கிறான்.
 
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..!
ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது...! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!

ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..!
அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!

மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே
முட்டிபோட்டு மண்டி இடும்..!

நற்குணங்கள் தடுமாறி போனதேன்?


Thanks  to M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

Post image for நற்குணங்கள் தடுமாறி போனதேன்?இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்களும் நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள். (ஆதாரம்-புகாரி)
ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.
இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி (ஸல்) அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்) அவர்கள் என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாகஎன்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சுவன” அழைப்பு


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
                 
                         "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)


 


அன்பிற்குரியவர்களே! சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள், அவைகளுள் அன்னாரின் திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு, இதைப் படித்து பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .நன்மைகள் செய்து நலம்பெற வாழ்த்துக்கள் (மொழிப்பெயர்ப்பாளார்).


1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா?


ஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).

2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா?


ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு
சமமாகும், அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).

3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா?


அல்லாஹ்விற்காக பள்ளிவாயிலொன்றை கட்டுபவருக்கு சுவனத்தில்
அதுபோன்றதை அல்லாஹ் கட்டுவான் என நபி (ஸல்) அவர்கள்
நவின்றார்கள் (முஸ்லிம்).
4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா?

விரும்புகின்றீர்களா?


உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

Tuesday, August 10, 2010

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான ரமலான்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான வரக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்விழை துவக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.

"யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’

என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் 'ஆமீன்' என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)


லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

இப்படிப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நாம் அரும்பாடுபட்டு செய்கின்ற நன்மைகளும், பாவமன்னிப்புக் கேட்டு செய்கின்ற பிரார்த்தனைகளும் முறையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் நமது நம்பிக்கை சார்ந்த இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் இஸ்லாத்தின் அடிப்படையான "ஏகத்துவம் என்றால் என்ன? என்பதைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக 'வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன?' என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது!

"தவ்ஹீதுல் உலூஹிய்யா" என்று அழைக்கப்படுகின்ற இவ்வகை தவ்ஹீதைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக அதிகம் இருக்கிறது. முதல் வகை தவ்ஹீதான 'படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துல்' என்பதைச் சரியாக புரிந்துக் கொண்ட முஸ்லிம்களில் பலர் இந்த வகைத் தவ்ஹீதையும் அடுத்து வரக்கூடியதையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இன்று இஸ்லாமிய சமூகத்திலே ஷிர்க், சமாதி வழிபாடுகள் போன்றவை மலிந்து காணப்படுகின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக சென்றபோது,சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக்

கூடியவர்களாக் வருவார்கள் என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க்கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.

மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.

இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி (ஸல்) அவர்கள்,ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் தான் ரமழானை அடைந்து பாவ மன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம அறிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

1.யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

2.பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

3.‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908

ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல், பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும். அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Thursday, January 28, 2010

அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


என் அன்புச் சகோதர, சகோதரிகளே நாம் மனிதர்கள் நம் அல்லாஹ்வோ கருணை வள்ளலாக இருக்கின்றான்! வாருங்கள் அந்த கருணை வள்ளல், ரஹ்மத்துல் ஆலமீன்!

ரப்புல் ஆலமீன் எவ்வாறு மக்கள் மீது கருணைகாட்ட தன் திருமறையின்
வாயிலாகவும் நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளாலும் சொல்கிறான் என்பதை அறிந்துக் கொள்வோம்! மேலும் அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகளை படித்து நல்லுணர்வு பெறுவோமாக!

நம்மை 10 மாதம் வயிற்றில் சிரமத்துடன் சிரமமாக பெற்ற தாய்க்கு முதல் இடம் பிறகுதான் தந்தை!

“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள்.

“அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) : புகாரி, முஸ்லிம்

பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்!

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள் அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.

முதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது!

“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன்.
“முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.


"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.

"அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.

குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.

இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails